1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 மே 2022 (16:00 IST)

மய்யத்தில் அவுட் ஆகும் இன்னொரு விக்கெட்! – பாஜகவில் இணைவதாக தகவல்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மாநில செயலாளர் சரத்பாபு விலகி பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம். கட்சி தொடங்கி 4 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கட்சியில் சேர்ந்த பலரும் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட சரத்பாபு ம.நீ.மவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்ததாகவும், தற்போது முற்றிலும் ஈடுபாடு குறைந்து வருவாய் ஈட்டும் மனநிலைக்கு அவர் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தற்போது மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியுள்ள சரத்பாபு இன்று பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.