திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (20:29 IST)

ஹெலிகாப்டர் உயரத்தில் வானத்தில் பறந்து சென்ற மனிதர் – ஆச்சர்யமளிக்கும் வீடியோ

பிரெஞ்சு அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒருவர் வானத்தில் ஹெலிகாப்டர் பறக்கும் உயரத்திற்கு பறந்து சென்ற காட்சி பிரான்ஸ் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஃப்ராங்கி சபாட்டா. இவர் மனிதர்கள் நின்று கொண்டு பறப்பதற்கான ஃப்ளைபோர்டு ஒன்றை தயாரித்துள்ளார். அதை வைத்து புகழ்பெற்ற இங்கிலீஷ் கால்வாயை கடக்க போவதாக அறிவித்தார். பிரான்ஸுக்கும் லண்டனுக்கும் இடையே உள்ள இங்கிலீஷ் கால்வாயானது 150 கி.மீ அகலம் கொண்ட கடல்பகுதியாகும். இந்த சாகசத்தை பார்ப்பதற்காக நிறைய மக்கள் டோவரில் உள்ள செயிண்ட் மார்கரெட் வளைகுடா பகுதிக்கு விரைந்தனர். நிறைய பேர் இதெல்லாம் நடக்காத காரியம் என்றே நினைத்தனர்.

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு தயாரான ஃப்ராங்கி தனது ஃப்ளைபோர்டு மூலம் பறக்க தொடங்கினார். பறக்க தொடங்கிய சில வினாடிகளிலேயே ஹெலிகாப்டர் பறக்கும் உயரத்தை தொட்ட அவர் இங்கிலீஷ் கால்வாயின் மேல் தனது பயணத்தை தொடங்கினார். வேகமாக பயணித்த அவர் 20 நிமிடங்களில் மாயமானார்.

அவர் பறந்து செல்வதை ஹெலிகாப்டரில் இருந்தபடி படம்பிடித்த தொலைக்காட்சி ஒன்று அவர் நடுகடலில் பயணித்தபோது கடலில் விழுந்துவிட்டதாக தெரிவித்தது. பாதிக்கடல் தாண்டியதும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகில் இறங்கி எரிபொருள் நிரப்பி கொண்டு மீதி பகுதியை தாண்டுவதாக திட்டம். படகை அடைய சில மீட்டர்களே இருந்த நிலையில் எரிபொருள் தீர்ந்ததால் கடலில் விழுந்தார். ஆனால் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை.

இதுகுறித்து ஃப்ராங்கி “இதில் தோல்வியடைந்ததில் எனக்கு வருத்தமே. இதை ஒரு டஜன் தடவையாவது கடினமான கடல் பகுதிகளில் நான் முயற்சித்திருக்கிறேன். படகை அடைய சில மீட்டர் தூரமே இருந்தபோது இப்படி நடந்தது துரதிரிஷ்டவ்சமானது” என்று தெரிவித்துள்ளார்.

Courtesy : Russia Today