1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Free Donut for vaccine people

தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்டுமுழுவதும் டோனட் இலவசம்… அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

டோனட்
அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ்இ கிரீம் என்ற நிறுவனம் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் அந்தந்த நாட்டு அரசுகளால் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கிரிஸ்பி கிரீம் என்ற நிறுவனம் ‘தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் தங்கள் கடைகளில் டோனட் இலவசமாக வழங்கப்படும்’ என அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட அட்டையைக் காண்பித்து தினமும் ஒரு டோனட்டை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.