முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கட்சியினர் 100 பேர் கைது !
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பிரமாண்ட பேரணை நடத்தியற்காக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெக்ரிக் –இ- இன்சப் கட்சியின் ஆட்சி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது.
இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார், தற்போது பாகிஸ்தானின் புதிய பிரதமராக முஸ்லீம் ஈக் கட்சித் தலைவர் ஷெரீப் பதவியேற்றார்.
இந்த நிலையில் தனது அரசை வெளி நாட்டு சக்தி சதி செய்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமென்று இம்ரான் குரல் கொடுத்துவருகிறார்.
எனவே, இன்று இம்ரான் கான் கட்சியினர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தலை நகர் இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணி நடத்தத் திட்டமிட்டனர்.
இதனால், இம்ரான் கட்சியினர் இப்பேரணிக்குச் செல்ல தயாராகினர். அப்போது பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தெக்ரிம் –இ- இன்சாப் கட்சியினர் நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.