ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (12:52 IST)

மொழியை வைத்து சர்ச்சை செய்கின்றனர்! – பிரதமர் மோடி!

சமீபகாலமாக மொழி குறித்த பிரச்சினைகள் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்தி தேசிய மொழியா என்பது குறித்து திரைப்பிரபலங்கள் இடையே ஏற்பட்ட கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தின. தொடர்ந்து பல திரை பிரபலங்களும் பிராந்திய மொழிகள், இந்தி மொழி திணிப்பு குறித்து பேசி வந்தனர்.

இந்நிலையில் இந்த மொழி விவகாரம் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி “சமீப காலமாக மொழியை வைத்து பல சர்ச்சைகளை கிளப்ப சிலர் முயற்சி செய்கின்றனர்.ஒவ்வொரு மாநில மொழியும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவே உள்ளது. தேசிய கல்விக் கொள்கையிலும் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.