வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (15:38 IST)

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து... 64 பேர் உயிரிழப்பு

Fire
தென்னாப்பிரிக்காவில்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  தீ விபத்து ஏற்பட்டது. இதில், 64 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டின் முக்கிய நகரன ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க  நாட்டின் முக்கிய நகரம் ஜோகஸ்பர்க். இப்பகுதி முக்கிய வணிக  நகரமாகவுள்ளது.

இங்குள்ள ஐந்துமாடி குடியிருப்பில் திடீரென்று இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கி 43 பேர் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், இதில், 64 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. ஒழுக்கற்ற வடிமைப்பில் இக்கட்டிடம் கட்டப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதும் அதில் வசிப்போர் வெளியேற முடியாமல் தவித்ததாகக் கூறப்படுகிறது.