பிரபல பாடகர் மீது பெண் பாலியல் குற்றச்சாட்டு : போலீஸார் கைது

miga singh
Last Updated: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (11:10 IST)
இந்தியாவில் மிகவும் பிரபலமான பாடகர் மிகா சிங். இவர்  மீது பிரேசில் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதை அடுத்து நேற்று அமீரகத்தில்  மிகா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மிகா சிங் தன் செல்போன் வழியே பல ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதாக பிரேசில் பெண் புகார் தெரிவித்தார்.
 
இந்நிலையில் மும்பையை சேர்ந்த மாடல் அழகி, மிகா சிங் தன்னை மானபங்கம் செய்ததாக  முதலில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்நிலையில் மிகா சிங் பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸாரால் அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் நீதிபதி முன் கோர்டில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :