1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (15:52 IST)

10 ஆண்டுகளில் 8,000 முறை... அலறவிட்ட அபார்ஷன் ஆனந்தி

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்குகளாக பெண்களுக்கு அனுமதியின்றி அபார்ஷன் செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் தற்போது வெளியே தெரியவந்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் ஒரு அப்பார்ட்மெண்ட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்டில் ஆனந்தி என்பவர் வசித்து வந்தார். வெளியில் டாக்டர் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றி வரும் இவர் படித்தது +2 மட்டுமே. 
 
இவர் தனது வீட்டில் பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிப்பதை வேலையாக வைத்திருந்துள்ளார். இதை அறிந்துக்கொண்ட போலீஸார் அவரது வீட்டை சோதனையிட்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
அதாவது, வீட்டில் அபார்ஷன் செய்ய தனி அறை, பெண்கள் காத்திருக்க 3 அறைகள் வைத்துள்ளார். இதற்கு முன்னர் ஒரு முறை 9 பெண்களை வரிசையாக படுக்கவைத்து மயக்க மருந்து கொடுத்து அபார்ஷன் செய்ய முயன்ற போது போலீஸில் சிக்கி கைதானார். 
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த தொழிலை செய்து சிக்கியுள்ளார். இவருக்கு உடந்தையாக அனந்தியின் கணவரும், ஆட்டோ டிரைவர் சிவகுமாரும் இருந்துள்ளனர். மேலும், கடந்த 10 வருடங்களில் 8,000த்துகும் மேற்பட்ட அபார்ஷன்களை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. 
 
திருவண்ணாமலை மட்டுமின்றி அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலும் இவருக்கு டீலிங் இருந்துள்ளது. ஒரு அபார்ஷனுக்கு 60,000 முதல் 1 லட்சம் வரை பணம் பெற்று வந்துள்ளார். சில சமயங்களில் பெண்களின் வீட்டிற்கே கூட சென்று அபார்ஷன் செய்து உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன. 
 
இந்த விவகாரம் தற்போது வெளியே தெரிந்து ஆனந்தி, அவளது கணவர், ஆட்டோ டிரைவர் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.