திடீரென முடங்கிய பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்: பயனாளிகள் அதிர்ச்சி

Last Modified வியாழன், 4 ஜூலை 2019 (06:53 IST)
முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக 12 மணி நேரம் முடங்கியதால் அதன் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கும், அதன் இணை சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாராமும், நேற்று திடீரென முடங்கியது. இதனையடுத்து உலகம் முழுவதும் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ்களை டவுன்லோடு மற்றும் அப்லோட் செய்ய முடியாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மில்லியன் கணக்கான புகார்கள் டுவிட்டரில் குவிந்தது. இந்த பிரச்சினை ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் அதிகம் இருந்ததாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களின் குழு இந்த கோளாறை சரி செய்ய போராடியது. நீண்ட நேரத்திற்கு பின்னரே கோளாறு சரிசெய்யப்பட்டு பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த கோளாறுக்கு ஹேக்கர்கள் கைவரிசை காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்குவது இது முதல்முறையல்ல. கடந்த மார்ச் மாதம் 24 மணி நேரத்திற்கும் மேல் ஃபேஸ்புக் முடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :