செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (16:49 IST)

மன அழுத்தத்தை போக்கும் ’வாட்ஸ் அப் ’ - ஆய்வில் தகவல்! மக்கள் ஹேப்பி

இன்றைய உலகின் அதிநவீன் தொழில்நுட்பத்தைக் கண்டு பிரமிக்காமல் இருக்க முடியாது. அதிலும் இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்ப புரட்சி காரணமாக உலகமே கைக்குள் அடங்கியதாகவே பார்க்கப்படுகிறது. இதில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள வாட்ஸ் அப் முக்கியமான ஒரு தகவல்தொடர்பு சாதனமாகப் பயன்படுகிறது.
குறிப்பாக : நாம் காலையில் எழுந்ததும் கையில் செல்போனை எடுத்து யாரெல்லாம் நமக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்கள், நாம் யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்பது குறித்து யோசிப்போம் அந்த அளவுக்கு வாட்ஸ் அப்  நம் அன்றாட வாழ்கையோடு இணைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் வாட்ஸ் அதிக நேரம் பயன்படுத்துவது நல்லது என்று ஒரு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
 
நாம் காலையில் எழுந்ததும் நெட்டை ஆன் செய்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கும் மார்னிங், குட் நைட் சொல்வது மனதை உற்சாகமாக வைத்திருக்கும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
வாட்ஸ் அப்பில் குரூப் சாட்டிங், தனிநபர் சாட்டிங் ஆகியவை இருப்பதும்  நம் மன அழுத்தத்தை, மன சோர்வை நீக்குவதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.
 
சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டாலும் கூட, இந்த வாட்ஸ் அப் இதிலிருந்து விதிவிலக்காக உள்ளது. அவை நண்பர்கள் வட்டத்தையும், தனி நபர்கள் மீதான அக்கரையை மீட்டெடுக்கும் களமாக வாட்ஸ் அப் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.