எங்களது ஆசிரியர்கள் அன்பானவர்கள்: கலாஷேத்ரா மாணவிகள் திடீர் பல்டி..!
கடந்த சில நாட்களுக்கு முன்னால் கலாஷேத்ரா கல்லூரி ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மாணவிகள் தற்போது அந்த புகாருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் எங்களது ஆசிரியர்கள் அன்பானவர்கள் என்றும் அவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த இரண்டு வாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளிடம் மகளிர் ஆணையரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் மாநில மகளிர் ஆணையம் கல்லூரிக்கு சென்று 162 மாணவிகளிடம் விசாரணை நடத்துமாறு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் நாங்கள் எந்த விதமான பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்றும் எங்களது ஆசிரியர்கள் மீது அன்பும் மரியாதையும் உள்ளது என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சில புகார் அளித்த மாணவிகள் எங்களுக்கும் அந்த புகாருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.
Edited by Mahendran