கூகிள் நிறுவனர் மனைவிக்கு ரூட்டு விடும் எலான் மஸ்க்!? – நெட்டிசன்கள் கிண்டல்!
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் தற்போது பிரபல கோடீஸ்வரர் ஒருவரின் மனைவியை காதலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் போன்றவற்றின் நிறுவனருமாக இருப்பவர் எலான் மஸ்க். 50 வயதாகும் எலான் மஸ்க்கிற்கு முன்னதாக திருமணம், லிவிங் ரிலேஷன்சிப் மூலமாக 9 குழந்தைகள் உள்ளனர்.
இதுவரை மூன்று பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்த எலான் மஸ்க், பாடகி ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். தற்போது அதுவும் கசந்து போக அதிலிருந்து விலகி தற்போது ஆஸ்திரேலிய நடிகை நட்டாஷா பஸ்செட் என்ற நடிகையை காதலித்துக் கொண்டிருக்கிறாராம். நடாஷாவுடன் டேட்டிங்கில் பிசியாக இருக்கு மஸ்க்கின் பார்வை கூகிள் இணை நிறுவனரின் மனைவி மீது திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
கூகிள் இணை நிறுவனரும், பிரபல கோடீஸ்வரருமான செர்ஜி பிரின் மனைவி நிகோல் ஷனாகனுடன் சமீபத்தில் ஒரு விருந்தில் எலான் மஸ்க் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. ஏற்கனவே செட்ஜி பிரினும், நிகோல் ஷனாகனும் பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதற்கு காரணம் தீராத விளையாட்டு பிள்ளை எலான் மஸ்க்தானா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். ஆனால் எலான் மஸ்க் தான் நிகோலுடன் காதலில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.