1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. England PM Liz Tress resigns her post

45 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து பிரதமர்!

liz tress
45 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து பிரதமர்!
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்று 45 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் லிஸ் ட்ரஸ் பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வெளியிட்டார் 
 
ஆனால் அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களே அவரது வரிக்குறைப்பு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வரி குறைப்பு திட்டத்தை பிரதமர் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்
 
இதனால் லிஸ் ட்ரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பதவி ஏற்ற 45 நாட்கள்
லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்தார். இதனையடுத்து விரைவில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
வேலைக்குச் சென்ற மனைவியை கொடூரமாகத் தாக்கிய கணவன் கைது