1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (16:07 IST)

கற்பழித்து சாலையில் வீசப்பட்ட இங்கிலாந்து பெண் தூதர்!

இங்கிலாந்த் தூதரக அதிகாரி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு சாலை வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இங்கிலாந்து தூதரகம் உள்ளது. இங்கு ரிபேகா டைகி என்ற என்பவர் பெண் அதிகாரியாக வேலைசெய்து வந்தார். இந்நிலையில் இவர் ஒருநாள் திடீரென மாயமாகிவிட்டார். எனவே, யாரேனும் கடத்தி இருப்பார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். 
 
இவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில், அவர் பெய்ரூட்டில் தேசிய நெடுஞ்சாலை அருகே பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். 
 
முதற்கட்ட விசாரணையில் அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக லெபனான் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்த தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.