ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2024 (11:53 IST)

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீர் ரத்து..! என்ன காரணம் தெரியுமா..?

Elon Musk
டெஸ்லாவின் தலைவா் எலான் மஸ்க் நாளை இந்தியா வரவிருந்த நிலையில் தனது பயணத்திட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
 
இந்தியாவில் மின்சார காா்களைத் தயாரிக்க அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறாா். இந்நிலையில் நிறுவனத்தின் நிா்வாகிகள் குழுவுடன் ஏப்ரல் 22-ஆம் தேதி அவா் இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
 
அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய மின்சார வாகன தயாரிப்பு கொள்கையின்படி ரூ.4,000 கோடிக்குமேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்தியாவை மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரமாக மாற்றவும் டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தியாவுக்கு வந்து, மின்சார வாகனத் தயாரிப்பு தொடா்பாக எலான் மஸ்க், பிரதமா் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது.

 
இந்நிலையில் எலான் மஸ்க் நாளை இந்தியா வரவிருந்த நிலையில் தனது பயணத்தை அவர் ஒத்தி வைத்துள்ளார். பணி சுமை காரணமாக இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியா வர முயற்சிப்பதாக எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.