வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (09:18 IST)

மனித மூளையில் சிப் பொருத்தும் திட்டம்! – எலான் மஸ்க்கின் முயற்சியில் முன்னகர்வு!

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் நியூராலிங் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்தும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் என பல நிறுவனங்களை நடத்தி வருபவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளி கனவை சாத்தியமாக்க முயற்சித்து வரும் எலாப் மஸ்க் மறுபுறம் மனித மூளையையும், இயந்திரங்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக குரங்கு ஒன்றிற்கு சிப் பொருத்தப்பட்டு ஜாய் ஸ்டிக் எதுவும் இல்லாமலே அது வீடியோ கேம் வெற்றிகரமாக விளையாட செய்துள்ளது நியூராலிங்க். இந்த பரிசோதனை வெற்றியடைந்தால் மாற்று திறனாளிகள் மின்னணு சாதனங்களை தொடாமலே மிக வேகமாக உபயோக்கிக்கவும், பின்னாட்களில் செய்ற்கை கை, கால்களை பொருத்தி அதற்கான சிப்பை மூளையில் செலுத்தி வழக்கமான கை, கால்களை செயல்படுத்துவது போல அவற்றை உபயோகிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும் என கூறப்படுகிறது.