செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (18:25 IST)

எனக்கு ஏலியன்கள் நண்பர்களாக உள்ளனர்: எலான் மஸ்க்

elon
அமெரிக்காவில் அடுத்தடுத்து மர்ம பொருள்கள் வான் பரப்பில் தோன்றி வரும் நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் எனது ஏலியன் நண்பர்கள் தான் வந்திருக்கிறார்கள் என்று கூறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்க வான்பரப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம பலூன்கள் பறந்த நிலையில் அதை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பின்னர் அந்த பலூன் சீனாவின் உளவு பலூன் என்று கூறப்பட்டது என்பதும், ஆனால் சீனா அதை மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று மர்ம பலூகள் பறக்கும் சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த சம்பவத்தை ஏலியன்களுடன் சிலர் தொடர்பு படுத்தினர். 
 
இந்த நிலையில் எலான் மஸ்க் தனது ட்வ்பிட்டர் பக்கத்தில் யாரும் கவலைப்பட வேண்டாம், எனது ஏலியன் நண்பர்கள் தான் வந்திருக்கிறார்கள் என்று நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார்.
 
Edited by Mahendran