ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2025 (11:09 IST)

விக்கிப்பீடியாவுக்கு பதில் இன்னொரு தளம்.. எலான் மஸ்க்கின் ஏஐ தொழில்நுட்ப 'க்ரோக்கிப்பீடியா' அறிமுகம்!

விக்கிப்பீடியாவுக்கு பதில் இன்னொரு தளம்..  எலான் மஸ்க்கின் ஏஐ தொழில்நுட்ப 'க்ரோக்கிப்பீடியா' அறிமுகம்!
இணையத்தில் தகவல்களை தேட உதவும் விக்கிப்பீடியாவுக்கு போட்டியாக, எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், 'க்ரோக்கிப்பீடியா' (Grokipedia) என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இத்தளத்தை பயன்படுத்துவது இலகுவானதாகவும், சிக்கலற்றதாகவும் இருக்கும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், இது அனைவருக்கும் கட்டணமின்றி வழங்கப்படும். விக்கிப்பீடியா மனிதர்களால் எழுதப்படுவதால் சார்பு தன்மை கொண்டதாக உள்ளது என்று விமர்சிக்கும் மஸ்க், நடுநிலையான தகவல்களை வழங்குவதற்காகவே க்ரோக்கிப்பீடியாவை உருவாக்கியதாக விளக்கமளித்துள்ளார்.
 
க்ரோக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து பதிவுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளாக இருக்கும். தற்போதுள்ள 0.1 பதிப்பை விட, இதன் முழுமையான 1.0 பதிப்பு பத்து மடங்கு சிறப்பானதாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த புதிய தளத்தின் வருகை, ஆன்லைன் தகவல் களத்தில் ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran