புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (07:45 IST)

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா எலான் மக்ஸ்?.. வைரல் புகைப்படங்கள்..!

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டேட்டிங் செய்வதாக வெளிவந்த புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது 53 வயதாகும் நிலையில், 47 வயதான இத்தாலி பிரதமர் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறார் என்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி, வதந்திகளாக பரவியுள்ளன.

சமீபத்தில் அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழாவில், பிரதமர் மெலோனி அவர்களுக்கு எலான் மஸ்க் விருது வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் எலான் பேசியபோது "வெளிப்புற அழகைவிட உள்புற அழகை அதிகமாக கொண்டிருக்கும் ஒருவராக, இத்தாலி பிரதமராக தனது பணியை சிறப்பாக செய்து வருவதை பார்த்து நான் வியந்து வருகிறேன். மெலோனிக்கு இந்த விருதை வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றும், மேலும் "ஒரு உண்மையான, நேர்மையான மனிதர் மெலோனி" என்றும் மஸ்க் புகழ்ந்தார். இதைத் தொடர்ந்து, மெலோனி எக்ஸ் பக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில், இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் எனும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இச்செய்திகளை எலான் மஸ்க் மறுத்துள்ளார். "அந்த நிகழ்ச்சியில் எனது தாயாருடன் பங்கேற்றேன், மேலும் மெலானி உடனான எந்த காதல் உறவும் இல்லை," என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Edited by Siva