செவ்வாய், 1 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (10:20 IST)

ஜோ பைடன், கமலா ஹாரிஸை யாரும் கொலை செய்ய முயற்சிக்க கூட இல்லை: எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் அவர்களை இரண்டு முறை கொலை செய்ய முயற்சி நடந்த நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடன்,  மற்றும் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் கொலை செய்ய முயற்சி கூட யாரும் செய்யவில்லை என எலான் மஸ்க் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் அவர்களை கடந்த ஜூன் மாதமே ஒரு முறை கொலை செய்ய முயற்சி நடந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கொலை முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறிய போது கமலா ஹாரிஸ், ஜோ பைடன் ஆகிய இருவரையும் படுகொலை செய்ய யாரும் முயற்சி கூட செய்யவில்லை என்று கூறி இருக்கிறார். அவரது இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் அவருடைய அமைச்சரவையில் நான் இடம் பெறுவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran