செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (15:55 IST)

மூக்கு முட்ட வைன் குடித்து மட்டையான யானைகள்: வைரல் போட்டோஸ்!!

யானைகள் சில வைன் குடித்து போதையில் தோட்டத்தில் தூங்கிய சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
 
சீனாவில் யுன்னான் மாகாண வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 14 யானைகள் அங்கிருந்த தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த வீட்டை சூரையாடியது. அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் வைனை இரு யானைகள் மூக்கு முட்ட குடித்து முடித்தது. 
 
இதன் போதையில் தள்ளாடிய படியே தேயிலை தோட்டத்தில் உலா வந்த அவை ஒரு கட்டத்தில் அங்கேயே பக்கத்து பக்கத்தில் படுத்து தூங்கிவிட்டது. இது சம்மந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.