சீனாவில் அதிர்ந்தது பூமி.. மக்கள் பீதி

earthquake
Arun Prasath| Last Updated: திங்கள், 3 பிப்ரவரி 2020 (18:15 IST)
நிலநடுக்கம்

சீனாவில் சிகுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.

சீனாவின் தென் மேற்கு பகுதியான சிகுவான் மாகாணம் கிங்பைஜைன் மாவட்டத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் உயிர்களுக்கோ, வீடுகளுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலநடுக்கம் பத்து வினாடிகளுக்கு மேல் உணரப்பட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஏற்கனவே சீனாவில் கொரனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் இந்நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :