ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 மே 2022 (10:57 IST)

அந்தமான் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

earthquake
அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
சற்றுமுன்னர் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் அதிர்வு ஏற்பட்டதாகவும் கட்டடங்கள் லேசாக குலுங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன 
 
ரிடர் அளவில் 4.4 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
அந்தமான் தீவில் உள்ள கேம்பெல் பே என்ற கிராமத்தை மையமாக கொண்டு இந்த நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
 
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பதால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது