1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 9 ஜனவரி 2023 (07:51 IST)

தென்பசுபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

Earthquake
தென் பசுபிக் கடலில் உள்ள வானூட்டு என்ற தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுகளில் வானூட்டு என்ற தீவும் ஒன்று. சுமார் 80 சின்ன சின்ன தீவுகளை வானூட்டு பகுதியில் நேற்று மாலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது 
 
ரிக்டர் அளவில் 7.0 ஆக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் மேடான பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளத்.
 
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பலமுறை வானூட்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் ஒரு சுனாமி ஏற்படுமோ என்ற அச்சம் அந்த பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva