1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (20:06 IST)

ஹாலிவுட் நடிகர் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் திடீர் மரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடந்த சில வருடங்களுக்கு முன் WWE விளையாட்டில் புகழ் பெற்றவரும் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவருமான டுவைன் ஜான்சன் திடீர் மரணம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த செய்தி ஒரு மர்ம நபரால் பரப்பப்பட்ட வதந்தி என பின்னர் தெரிய வந்ததை அடுத்தே ரசிகர்கல் நிம்மதி அடைந்தனர்
 
டுவைன் ஜான்சனின் மரண செய்தி வதந்தியாவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த 2011ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு செய்தி வெளியான போது தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தான் மரணமடையவில்லை, என்னைப்பற்றி வெளியான மரண செய்தி தவறானது என்று நடிகர் டுவைன் ஜான்சன் விளக்கமளித்திருந்தார். அதன்பின்னர் மீண்டும் 2014ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு வதந்தி பரவியது. தற்போது 5 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த வதந்தி பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
டுவைன் ஜான்சனின் மரண வதந்தியை பரப்பியது யார்? என்பது குறித்து அமெரிக்கா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வதந்தியை ஒரு ஹேக்கர் பரப்பியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது