70 வயதில் தந்தையான இந்த ஹாலிவுட் ஹீரோ யார் தெரியுமா ?

Last Modified புதன், 6 நவம்பர் 2019 (13:24 IST)
பல சர்ச்சைகளுக்குப் பெயர் போன பிரபல ஹாலிவுட் நடிகரான ரிச்சர்ட் கேர் தனது 70 ஆவது வயதில் தந்தையாகியுள்ளார்.

ஹாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் ரிச்சர்ட் கேர். இவர் ரொமாண்டிக் மற்றும் சில எரோடிக் படங்களில் நடித்துள்ளதால் ஹாலிவுட் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமானவர். பிக்பாஸ் போட்டியில் நிறவெறித் தாக்குதலுக்கு உள்ளான இந்திய நடிகை ஷில்பா ஷெட்டியை ஒரு மேடையில் வைத்து முத்தம் கொடுத்த்உ சர்ச்சையைக் கிளப்பி இந்தியாவிலும் நன்கு பிரபலமானவர்.

இந்நிலையில் இப்போது வேறொரு விஷயத்த்துக்காக அவர் மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். ரிச்சர்ட்டுக்கும், அவரது முதல் மனைவியான கேரி லாவ்ரெலுக்கும் ஹோமர் கேரி என்ற 19 வயது மகன் இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டனர். அதையடுத்து கேர், அலஜேன்ரா என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த இரண்டாவது திருமணத்தின் போது அவருக்கு வயது 69. இந்நிலையில் இப்போது அவரது இரண்டாவது மனைவிக்கு அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். 70 வயதில் ரிச்சர்ட் தந்தையாகியிருப்பதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பெய்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :