வதந்தி உண்மையானது: ’தளபதி 64’ படத்தின் தயாரிப்பாளர் திடீர் மாற்றம்

Last Modified திங்கள், 4 நவம்பர் 2019 (22:27 IST)
விஜய் நடித்துவரும் 64 வது படமான ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’தளபதி 64’ படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இந்த ப்டத்தின் தயாரிப்பாளர் இது குறித்து விளக்கமளித்தபோது, ‘இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பில் சுமூகமாக சென்று கொண்டிருப்பதாகவும் இதுகுறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்து கொண்டிருந்த லலித் என்பவர் தற்போது இணை தயாரிப்பாளராக மாறியுள்ளதாகவும், இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளது. எனவே இனி தளபதி 64 படத்தின் பிரிட்டோ மற்றும் லலித் ஆகிய இருவரும் தயாரிப்பாளர்களாக இருப்பார்கள் என்பதும் இதுகுறித்த வதந்தி தற்போது உண்மையாகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது லலித் மிகவும் திறமையாக செயல்பட்டதன் காரணமாக விஜய்யே அவரை அழைத்து இணை தயாரிப்பாளராக மாற்றியதாக கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :