திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

படம் எப்போ ரிலீஸ் ஆகும்? அட்லியிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் இயக்குனர்!

இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ’பிகில்’ படத்தின் டிரைலர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி சமூக வலைதளங்களில் ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை பார்த்த பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பதாக தங்கள் டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். ஷாருக்கான் உட்பட பல திரையுலக பிரபலங்கள் அட்லிக்கும் ’பிகில்’ படக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் பில்டியூக் என்பவர் அட்லிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இந்த படம் எப்போது ரிலீசாகும்? அமெரிக்காவில் ரிலீசாகுமா? சிறப்பு காட்சிகள் உண்டா? அப்படி உண்டென்றால் அது எந்த தேதியில்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்
 
இயக்குனர் பில்டியூக் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குனர் அட்லி விரைவில் இதுகுறித்த தகவலை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்