வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஜூலை 2024 (10:10 IST)

ட்ரம்ப்பை சுட்ட துப்பாக்கி மாடல்.. அமெரிக்கா முழுவதும் தடை செய்யும் ஜோ பைடன்!

Jo Biden

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சுட்டத் துப்பாக்கி மாடலை அமெரிக்கா முழுவதுமே தடை செய்ய ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.

டிசம்பரில் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்டு ட்ரம்பை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ட்ரம்ப் உயிர் தப்பிய நிலையில் அமெரிக்க பிரஜை ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ட்ரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். உலக அளவில் இந்த கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் சர்வதேச சதி உள்ளதா என்பது குறித்தும் எஃப்.பி.ஐ, சிஐஏ தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
 

இந்நிலையில் ட்ரம்ப்பை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்ட AR-15 ரக துப்பாக்கியை தடை செய்ய வேண்டுமென குரல்கள் எழுந்துள்ளன. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் இந்த ரக துப்பாக்கிகள் சாதாரண மக்களுக்கும் கிடைப்பது ஆபத்தாக உள்ளது,

இதுகுறித்து லாஸ் வேகாஸ் கூட்டத்தில் பேசிய அதிபர் ஜோ பைடன் “போரில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை அமெரிக்க வீதிகளில் இருந்து அகற்ற என்னுடன் இணையுங்கள். டொனால்ட் ட்ரம்ப்பை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட AR-15 ரக துப்பாக்கி பயன்பாட்டை அமெரிக்காவில் சட்டவிரோதமாக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K