1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (18:55 IST)

கட்டாரில் பணிபுரிந்த டாக்டர் பணிநீக்கம்? குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததன் விளைவு

கட்டார் நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த டாக்டர் ஒருவர் தனது முகநூலில் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் அவர் மருத்துவமனையில் இருந்து நீக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கட்டார் நாட்டில் டாக்டராக பணிபுரிந்து கொண்டு இருப்பவர் டாக்டர் அஜித். இவர் சமீபத்தில் தனது முகநூலில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து தனது ஆதரவையும் அந்த சட்டம் குறித்த விளக்கத்தையும் தெரிவித்திருந்தார் 
 
இதனையடுத்து அங்கு உள்ள முஸ்லிம்கள் அவர் மீது கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு அவர் பணிபுரிந்த மருத்துவமனையில் புகார் அளித்தனர். தொடர்ச்சியான வந்த புகாரை அடுத்து டாக்டர் அஜித் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தனது சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக அவரிடம் லெட்டர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது
 
இஸ்லாமிய நாட்டில் வாழும் ஒருவர் குடியுரிமை சட்டம் குறித்து பேசினாலே அவரது வேலை பறிபோகும் நிலையில் உள்ளது என்பதை இந்த சம்பவம் மூலம் தெரிய வருகிறது என்று சமூக வலைதள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்