செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 19 டிசம்பர் 2019 (12:10 IST)

பறிபோன வேலை... மீரா மிதுனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய ஊழல் தடுப்பு இயக்குனர் இவர் தான்!

மீரா மிதுனுக்கு பதிலாக  டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் யாரும் எதிர்பாராத விதமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக நியமிக்கப்பட்டார். அண்மையில் இது தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையையும் அது குறித்த அதிகாரப்பூர்வமான கடிதத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஊழலை ஒழிக்கப் போவதாக சபதம் எடுத்து “ஊழல் செய்பவர்கள் யாராலும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. நான் உங்களை எந்நேரமும் கவனித்துக் கொண்டே இருப்பேன்” என சவால் சீன் போட்டு வந்தார்.

— Meera Mitun (@meera_mitun) November 14, 2019
 
இந்த நிலையில் மீரா மிதுனிடம் இருந்து அந்த பதவியை பறித்து அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம். மேலும் , அவருக்கு பதிலாக திருச்சியைச் சேர்ந்த பிரபலமான டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் என்பவர் தற்போது அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். மீரா மிதுன் தன்னை பற்றிய போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழை சமர்ப்பிக்காததால்தான் இந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது..
அதுமட்டுமல்லாமல் மீரா மிதுன் வகித்துவந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனர் பதவிக்கு என எந்த அதிகாரமும் கிடையாது.. அரசு அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் அளிக்கும் உரிமை மட்டுமே இருக்கிறது தற்போது அந்தப் பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.