இன்றிரவு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!
கடந்த இரண்டு நாட்களாக பகலில் வெயில் அடித்தாலும், இரவில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை கா வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால், தமிழகத்தில் இன்னும் சில நாட்கள் பரவலாக மிதமான மழை முதல் கனமழை, மிக கனமழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran