தொடர்புடைய செய்திகள்
- ஈரானுடன் போர் நிறுத்தம்!.. ஒருவழியாக சம்மதம் சொன்ன இஸ்ரேல் பிரதமர்!..
- ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் நீங்க தனி!.. இஸ்ரேலை எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்!..
- 10 ஆயிரம் வீரர்கள்.. நூற்றுக்கணக்கான போர் விமானங்கள்!.. ஈரானை நெருங்கும் அமெரிக்கா!...
- ரூ.2222 கோடி போச்சே!.. ஈரான் போரில் கண்காணிப்பு ட்ரோனை இழந்த அமெரிக்கா!..
- சமையல் கேஸ் சிலிண்டர் பிரச்சனை சரியாக 4 வருடங்கள் ஆகும்!.. பகீர் தகவல்!..
ஹார்மூஸ் நீரிணையை முழுவதுமாக மூடிய ஈரான்!.. அமெரிக்கா அதிர்ச்சி!...
ஈரான் மட்டுமில்லாமல் குவைத், சவுதி அரேபியா போன்ற பல வளைகுடா நாடுகளில் இருந்தும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் கப்பல்கள் ஈரானின் ஹார்மூஸ் நீரிணை வழியாகத்தான் செல்கிறது. ஆனால் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை துவங்கியதால் ஹார்மூஸ் நீரினையை ஈரான் மூடியது.
இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்லாததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவில் ஹோட்டல்களுக்கு கொடுக்கப்படும் வணிக சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஈரான் ஹார்மூஸ் நீரிணையை திறக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியும் ஈரான் கேட்கவில்லை
சமீபத்தில் அமெரிக்காவுகும், ஈரானுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட போர் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஹார்மூஸ் நீரிணை திறக்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஹார்மூஸ் நீரிணையில் தாக்குதல் நடந்தது. அதோடு, ஹார்மூஸ் வழியாக செல்லும் இந்திய கப்பல்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதேபோல், இஸ்ரேலும் ஈரானை தாக்கியது.
இதில் கோபமடைந்த ஈரான் ஹார்மூஸ் நீரிணை முற்றிலும் மூடப்படுவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேலுடன் மோதல் தொடர்வதால் எந்த கப்பலும் நீரிணையை கடக்க அனுமதி இல்லை எனவே ஈரான் அறிவித்துள்ளது.
