1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூன் 2018 (11:59 IST)

டிரம்ப்- கிம் ஜாங் சந்திப்புக்கான அதிகாரபூர்வமான நேரம் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு வரும் 12ம் தேதி காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவும் வடகொரியாவும் அணு ஆயுத கொள்கை விஷயத்தில் மோதிக்கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. இதன் பின்னர் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது போக்கை மாற்றிக்கொண்டு டிரம்பை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி நேரில் சந்திக்க இருந்தனர். ஆனால், திடீரென டிரம்ப், கிம் உடனான சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதன் பின்னர் மீண்டும் சிங்கப்பூர் சந்திப்பு நடைபெறும் என டிரம்ப் தெரிவித்தார்.
 
இந்நிலையில் டிரம்பும், கிம்மும் வரும் 12ம் தேதி சிங்கப்பூரில் காலை 9 மணிக்கு சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.