திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 26 மே 2018 (16:39 IST)

அரசியல் கட்சி தொடங்கிய விளையாட்டு வீரர்! 3வது அணியில் இணைகிறார்

சித்து உள்பட ஒருசில கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் நுழைந்துள்ள நிலையில் பிரபல கால்பந்தாட்ட வீரர் பைசுங் பூட்டியா என்பவர் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
 
சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த இவர் மாநில கட்சி ஒன்றை தொடங்கியுள்ளதாகவும், தமது கட்சி காங்கிரஸ் மற்றும் பாஜக கொள்கைகளுக்கு எதிரானது என்பதால் 3வது அணியில் இணைந்து செயல்பட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் ஆம் ஆத்மி கட்சியை முன்மாதிரியாக தனது கட்சியை நினைப்பதாகவும், தனது கட்சியின் ஒரே கொள்கை ஊழலுக்கு எதிராக போராடுவது என்றும் பூட்டியா கூறியுள்ளார்.
 
கடந்த 25ஆண்டுகளாக சிக்கிம் மாநிலத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி நடந்து வருவதாகவும், அந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே தனது கட்சியின் குறிக்கோள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 
 
கோல் அடிப்பதைவிட அரசியலில் வெற்றி பெறுவது கடினம் என்று தனக்கு தெரியும் என்றும் இருப்பினும் மண்ணின் மைந்தன் என்ற வகையில் மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் பூட்டியா மேலும் தெரிவித்துள்ளார்