தீவிரவாதி ‘அல் பாக்தாதி’ மரணத்துக்கு உதவிய ’நாய் ’: அதிபர் டிரம்ப் புகழாரம்... வைரல் போட்டோ

dog
sinojkiyan| Last Updated: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (18:06 IST)
இராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்று தனி இஸ்லாமிக் நாடு வேண்டும் என வன்முறை தாக்குதல் நடத்தி, உலக நாடுகளையும் அச்சுறுத்தி,  அப்பாவி மக்களை கொன்று குவித்து  வந்த ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாத் சிரியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, அந்த அல் பக்தாத் பதுங்கி இருந்த சுரங்கப்பாதைக்கு அமெரிக்க ராணுவமும் , அவர்களுடன் ஒரு ராணுவ நாயும் சென்றது.
 
அப்போது அல் பக்தாத் தனது உடலில் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அதனால் நாய் பாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
dog
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், அல் பக்தாத் மரணத்திற்கு பெரிதும் உதவியது இந்த நாய் ஆனால் அதன் பெயர் குறிப்பிடப்படவில்லை, இருப்பினும் மிகப்பெரிய வேலையைச் செய்துள்ளது என புகழாரம் சூட்டியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :