திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (12:15 IST)

பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்! – மக்கள் அலறியடித்து ஓட்டம்!

பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் அதிர்ந்தன. மக்கள் அலறியடித்து கொண்டு வீதிகளுக்கு வந்தனர்.

இந்த நிலநடுக்கம் மத்திய மிண்டானோ முதல் சுற்றியுள்ள அனைத்து மாகாணங்களிலும் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தெரியவரவில்லை.

இதே அக்டோபர் மாதம் 16ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மிண்டானோ பகுதியில் பல கட்டிடங்கள் இடிந்தன. 5 பேர் உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.