திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (10:19 IST)

எரிமலை வெடிப்பால் பேரழிவு..! நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா...!

Papua New Guinea
எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா சார்பாக மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


 
அண்மையில் பப்புவா நியூ கினியாவில் உள்ள உலாவுன் மலையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதியில் கடும் பேரழிவு ஏற்பட்டது. இதையடுத்து பப்புவா நியூ கினியாவுக்கு ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு உதவிகளை வழங்குவதாக இந்திய அறிவித்தது. அதன்படி டெல்லியிலிருந்து 6 டன் அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள் உட்பட 11 டன் பேரிடர் நிவாரண பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், தூங்கும் பாய்கள், சுகாதாரக் கருவிகள், சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், சானிட்டரி பேட்கள், ரேபிட் ஆன்டிஜென் சோதனைக் கருவிகள், கர்ப்ப பரிசோதனைக் கருவிகள், கொசு விரட்டிகள் மற்றும் குழந்தை உணவுகள் ஆகியவை அடங்கும்.