1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (18:23 IST)

பள்ளி மாணவி கற்பழித்து கொலை: 7 பேருக்கு மரண தண்டனை!

பள்ளி மாணவி கற்பழித்து கொலை: 7 பேருக்கு மரண தண்டனை!

இலங்கையின் யாழ்பாணத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பள்ளி மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


 
 
யாழ்ப்பாணம் புங்குடு தீவைச் சேர்ந்த பள்ளி மாணவி வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி பள்ளி சென்று வீடு திரும்பிய போது அவரை கும்பல் ஒன்று கடத்தி சென்று மிகவும் கொடூரமாக கற்பழித்து கொலை செய்தது.
 
இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை அந்த நாட்டு காவல் துறையினர் கைது செய்து அதில் 5 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மீதமுள்ள 4 பேர் மீது சதித்திட்டம் தீட்டியது மற்றும் உடந்தையாக இருந்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கு யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மாணவியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த முக்கிய குற்றவாளி சுவிஸ் குமார் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை மற்றும் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.