1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 ஆகஸ்ட் 2018 (11:17 IST)

வீட்டுவேலை செய்ய சொன்ன தந்தையை கொலை செய்த 3 சகோதரிகள்

ரஷ்யாவில் தந்தை ஒருவரை அவரது 3 மகள்களே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மாஸ்கோ நகரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகள்களுடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் ஆல்பர்ட் தனது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆல்பர்ட்டின் உடலை கைப்பற்றிய போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
அவரது மகள்களை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர்கள் தந்தை ஆல்பர்ட் எந்நேரமும் எங்களை படிக்க விடாமல் வீட்டு வேலையை செய்ய வற்புறுத்தினார். ஆகவே தான் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தோம் என தெரிவித்தனர்.
 
இதனையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.