சினிமா இயக்குநர் வாய்ப்பு கிடைக்காததால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த வாலிபர்!
சினிமாவில் இயக்குனர் வாய்ப்பு கிடைக்காததால் தூக்கில் தொங்கிய வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் அருகே திட்டக்குடி என்ற பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக சினிமா இயக்குனர் ஆசையுடன் முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால் கடந்த சில நாட்களாக அவர் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில் சொந்த ஊரான திட்டக்குடி வந்த அந்த வாலிபர் திடீரென புளிய மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சினிமாவில் இயக்குனராக ஆசை நிறைவேறாததால் தூக்கில் தொங்கிய வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva