திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (15:16 IST)

தண்ணீர் பாட்டிலில் பொன்னியின் செல்வன்! – வைரலாகும் Pics!

Ponniyin Selvan
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதை ப்ரொமோட் செய்யும் விதமாக பிஸ்லெரி பாட்டிலில் பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் முன்பதிவு தொடங்கி டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்துள்ளன. படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Ponniyin Selvan


தற்போது மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லெரி தனது வாட்டர் பாட்டிலில் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களான குந்தவை, ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் ஆகியோரது படங்களை அச்சிட்டு விநியோகித்துள்ளது. லிமிடட் எடிஷனாக இந்த தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்துள்ளன.