திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (17:20 IST)

படு பாதாளத்திற்கு சென்ற கிரிப்டோகரன்ஸி விலை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

cripto currency
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் 100 சதவீதம் லாபம் கிடைக்கும், ஆயிரம் சதவீதம் லாபம் கிடைக்கும் என்று கூறிய நிலையில் தற்போது படு பாதாளத்திற்கு கிரிப்டோகரன்ஸி விலை சென்றுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவிலான கிரிப்டோகரன்ஸி மதிப்பு சுமார் 10 சதவீதம் குறைந்து உள்ளது. இதனால் 1.27 டிரில்லியன் அளவுக்கு சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கிரிப்டோகரன்ஸி மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் டுவிட்டரில் இது குறித்த ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே இந்திய பங்குச் சந்தை உள்பட உலக அளவில் பங்குச் சந்தை சரிந்து வரும் நிலையில் கிரிப்டோகரன்சி விலையும் சரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது