திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (13:56 IST)

ஒரே ஒரு சிப்ஸின் விலை 1.6 லட்சமா? அப்படி என்னப்பா இருக்கு அதுல?

ஒரு நபர் தன்னுடைய பிரத்யேகமான உருளைக் கிழங்கு சிப்ஸை 1.6 லட்சத்துக்கு விற்று கவனத்தை ஈர்த்துள்ளார்.

புகழ்பெற்ற ஆன்லைன் விற்பனைத் தளமான eBay- வில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய ஒரு உருளைக் கிழங்கு சிப்ஸை 2000 யூரோஸுக்கு (அதாவது இந்திய மதிப்பில் 1.6 லட்சம் ரூபாய்) விற்பனை செய்துள்ளார். இவ்வளவு விலைக்கு அந்த சிப்ஸ் விற்கப்பட்டதற்குக் காரணம் அந்த சிப்ஸ் மற்ற சிப்ஸ்களை விட வித்தியாசமான வடிவத்தில் இருந்ததே காரணம் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.