திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (11:08 IST)

270 அடி உயர பாறையிலிருந்து குதித்த காதல் ஜோடியினர்

கேரளாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடியினர், 270 அடி உயர பாறையிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் கெவின்(23) என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் கேரளாவில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
கேரள  மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பாப்பினஞ்சேரியை சேர்ந்த கமல்குமாரும் (24) அதே பகுதியை சேர்ந்த அஸ்வதியும்(20) கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இவ்விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வரவே அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனால் மனமுடைந்த காதல் ஜோடியினர் தற்கொலை செய்ய திட்டமிட்டு, 270 அடி உயரபாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், காதல் ஜோடியினரை மீட்டி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இருவீட்டாரின் பெற்றோர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.