குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அவசியம்! – கோஸ்ரா ரிகா அரசு உத்தரவு!
உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த பரிசீலனை ஆய்வில் உள்ள நிலையில் கோஸ்டா ரிகாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனாவால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தியுள்ளன. எனினும் அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு கருதி இதுவரை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சில நாடுகளில் 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் 5 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்காக பைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.