1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (08:54 IST)

பிரதமரின் மனைவிக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

பிரதமரின் மனைவிக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
நல்லவர் கெட்டவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர், ஏழை பணக்காரன், சாதாரண குடிமகன் முதல் பிரதமர் வரை கூட கொரோனா வைரஸ் தாக்கி வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஈரான் நாட்டின் துணை அதிபர் மற்றும் ஈரான் நாட்டின் சுகாதாரம் அமைச்சருக்கும் பிரிட்டன் நாட்டின் சுகாதார அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கனடா நாட்டு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகேயருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவருடைய ரத்தப் பரிசோதனை முடிவின்படி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அடுத்து கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பிரதமர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. ஒரு நாட்டின் பிரதமரின் மனைவிக்கே கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,627லிருந்து 4,972 ஆக உயர்ந்துள்ளது என்பதும், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139லிருந்து 1,34,559 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.