செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (08:18 IST)

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கொரோனா தாக்குதல் – ரசிகர்கள் அதிர்ச்சி !

ஹாலிவுட்டின் பிரபல நடிகரான டாம் ஹாங்ஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அவரே சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

பாரஸ்ட் கம்ப் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் டாம் ஹாங்ஸ். உலகெங்கும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அவர், தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த செய்தி ஒன்றால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘நானும் என் மனைவியும் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்ததில் இருந்து உடல்நலம் சரியில்லாமல் இருந்தோம். கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அதற்கான பரிசோதனைகளை மெற்கொண்டோம்.  அதில் எங்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இருவரும் தனித்தனி பாதுகாப்பு அறைகளில் சிகிச்சை பெற்று வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.