கொரோனா எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை!
கர்நாடகாவில் கொரோனா வெகுவாக பரவி வருவதாக கருதப்படும் நிலையில் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உள்ளது. இதில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் பெங்களூரில் மழலையர் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 23ம் தேதிக்குள் தேர்வுகளை முடித்துக் கொண்டு அனைத்து வகுப்பினருக்கும் விடுமுறை அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் குறிப்பிட்ட கால அட்டவணை படியே நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.