செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (12:31 IST)

கொரோனா கப்பலில் இருந்து தப்பிய அமெரிக்கர்கள்!!

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.  
 
ஜப்பானின் சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸ் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் தேதி ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு புறப்பட்டது.  
 
இக்கப்பல் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பிய போது, அக்கப்பலில் பயணித்த 80 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் ஜப்பான் துறைமுகத்தில் அனுமதிக்க மறுத்தனர். 
 
டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 355 ஆக உள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், கப்பலில் உள்ள அமெரிக்கர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். 
 
இதனிடையே அந்த கப்பலில் இருக்கும் 40 அமெரிக்கர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் அவர்கள் அமெரிக்காவுக்கு மீட்டு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் என்றும் தெரிகிறது. 
 
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பானில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும், மீதமுள்ளோரை நாட்டிற்கு அழைத்து செல்லவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.